அடேங்கப்பா…. பரோட்டா சூரிக்கு இத்தனை கோடி சொத்தா? வாய்பிளக்கும் திரையுலக வட்டாரம்!
Author: Rajesh12 January 2024, 11:23 am
தமிழ் சினிமாவில் கூட்டத்தில் ஒருவராக காமெடி காட்சியில் தலைகாட்டியவர் நடிகர் சூரி. மதுரையை சொந்த ஊராக கொண்டு கிராமத்தானாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். 1997முதல் தற்போது வரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
காமெடி நடிகராக நடித்து இன்று ஹீரோவாக கோடிகளில் சம்பளம் வாங்குபவராக சூரி உயர்ந்திருக்கிறார். அதற்காக அவர் மிகவும் உழைத்து தான் இந்த இடத்தை பிடித்துள்ளார். ஆம், தனது உடலை கட்டுமஸ்தான தோற்றத்தில் வைக்க எப்போதும் உடற்பயிற்சி, ஒர்க் அவுட் என கடைபிடித்து ஹீரோவுக்கான தோற்றத்தையும், உடல் அமைப்பையும் வரவைத்துக்கொண்டார். அவரது transformation பல டாப் நடிகர்களையே பிரம்மிக்க செய்தது.
சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். மற்ற எந்த காமெடி நடிகர்களும் இந்த அளவிற்கு உயர்ந்ததில்லை என கோலிவுட்டில் பேசப்படுகிறார். மதுரை மாவட்டம் ராஜாக்கூர் என்ற கிராமத்தில் முத்துசாமி மற்றும் வேங்கையரசி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த சூரி அண்ணன், தம்பி என பெரிய குடும்பத்தில் போதிய வருமானம் இன்றி வறுமையில் வளர்ந்தார்.
தனது அப்பாவால் குடும்பத்தை நகர்த்த முடியாததால் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டார். சூரி 8 வகுப்பு வரை தான் படித்திருக்கிறார். அதன் பின்னர் லாரி கிளீனர் ஆக கூலி வேலை செய்து வந்தாராம். அதன் பின்னர் கொஞ்சம் முயற்சித்து தனது அயராது உழைப்பால் தனக்கிருந்த திறமையை வைத்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக உயர்ந்திருக்கிறார்.
இவர் சினிமாவில் வளர்ந்த பின்னர் மதுரையில் ” அம்மன் உணவகம்” என ஓட்டல் ஒன்றை ஆரம்பித்து குறைவான விலையில் தரமான உணவை வழங்கி வருகிறார். தற்போது ஹீரோ, தொழிலதிபர் என சிறந்து விளங்கிவரும் நடிகர் சூரியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 40 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது இவரின் இமாலய வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அவர் முன்னி ஹீரோவை போன்றே தனது உடலையும் திறமையும் வளர்த்து நல்ல நல்ல திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.