எனக்கு ஓட்டு இல்லையா?.. ஆசையோடு வந்த சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!(video)
Author: Vignesh19 April 2024, 6:39 pm
தமிழ் சினிமாவில் கூட்டத்தில் ஒருவராக காமெடி காட்சியில் தலைகாட்டியவர் நடிகர் சூரி. மதுரையை சொந்த ஊராக கொண்டு கிராமத்தானாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். 1997முதல் தற்போது வரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் படிக்க: நிர்வாணமாக நடித்த ரஜினி பட நடிகை.. -இந்தியாவில் தடை செய்யப்பட்ட படம் இன்று வெளியானது..!
காமெடி நடிகராக நடித்து இன்று ஹீரோவாக கோடிகளில் சம்பளம் வாங்குபவராக சூரி உயர்ந்திருக்கிறார். அதற்காக அவர் மிகவும் உழைத்து தான் இந்த இடத்தை பிடித்துள்ளார். ஆம், தனது உடலை கட்டுமஸ்தான தோற்றத்தில் வைக்க எப்போதும் உடற்பயிற்சி, ஒர்க் அவுட் என கடைபிடித்து ஹீரோவுக்கான தோற்றத்தையும், உடல் அமைப்பையும் வரவைத்துக்கொண்டார். அவரது transformation பல டாப் நடிகர்களையே பிரம்மிக்க செய்தது.
சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். மற்ற எந்த காமெடி நடிகர்களும் இந்த அளவிற்கு உயர்ந்ததில்லை என கோலிவுட்டில் பேசப்படுகிறார். அடுத்ததாக ராம் இயக்கத்தில் “ஏழு கடல் ஏழுமலை”, துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கருடன் படத்தில் நடிக்க சூரி ரூ. 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். ஆரம்பத்தில் ரூ.5க்கும் ரூ.10க்கும் கஷ்டப்பட்டு கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்த சூரி இன்று இந்த அளவிற்கு தன் சொந்த முயற்சியால் வளர்ந்திருப்பதை கோலிவுட் திரையுலகம் பிரம்மித்து பேசுகிறது.
மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!
இந்த நிலையில், சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற நடிகர் சூரி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால், இந்த முறை எனது பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். எனது மனைவியின் பெயர் உள்ளது. ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. எங்கு தவறு நடந்தது என தெரியவில்லை. வேதனையுடன் கூறுகிறேன் தயவு செய்து அனைவரும் 100% வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
எல்லோரும் வாக்களியுங்கள்🙏 pic.twitter.com/Yw6Xk0Hgsn
— Actor Soori (@sooriofficial) April 19, 2024