ஏழுகடல் ஏழு மலை தாண்டி வெளிநாட்டு விருது விழாவில் கலக்கும் சூரி – குவியும் வாழ்த்துக்கள்!

Author: Rajesh
30 January 2024, 5:18 pm

தமிழ் சினிமாவில் கூட்டத்தில் ஒருவராக காமெடி காட்சியில் தலைகாட்டியவர் நடிகர் சூரி. மதுரையை சொந்த ஊராக கொண்டு கிராமத்தானாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். 1997முதல் தற்போது வரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

actor soori - updatenews360

காமெடி நடிகராக நடித்து இன்று ஹீரோவாக கோடிகளில் சம்பளம் வாங்குபவராக சூரி உயர்ந்திருக்கிறார். அதற்காக அவர் மிகவும் உழைத்து தான் இந்த இடத்தை பிடித்துள்ளார். ஆம், தனது உடலை கட்டுமஸ்தான தோற்றத்தில் வைக்க எப்போதும் உடற்பயிற்சி, ஒர்க் அவுட் என கடைபிடித்து ஹீரோவுக்கான தோற்றத்தையும், உடல் அமைப்பையும் வரவைத்துக்கொண்டார். அவரது transformation பல டாப் நடிகர்களையே பிரம்மிக்க செய்தது.

சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். மற்ற எந்த காமெடி நடிகர்களும் இந்த அளவிற்கு உயர்ந்ததில்லை என கோலிவுட்டில் பேசப்படுகிறார். இந்நிலையில் தற்போது அடுத்ததாக ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழுமலை படம் இன்று நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர் டாம் விருது விழா நிகழ்ச்சியில் போட்டிக்காக திரையிடப்பட்டுள்ளது.

அதில் கலந்துகொண்ட சூரி செம ஸ்டைலாக ஹேண்ட்ஸம் லுக்கில் பிளேசரை வைத்துக்கொண்டு மாஸாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ஆசிர்வாதம் தங்கள் படக்குழுவினருக்கு வேண்டுமென பதிவிட்டுள்ளார். தற்போது சூரியின் கைவசம் விடுதலை, கொட்டுக்காளி, ஏழுகடல் ஏழுமலை மற்றும் கருடன் உள்ளிட்ட படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 399

    0

    0