திருச்செந்தூரில் சூரிக்கு பிறந்த ஞானோதயம்.. Thug life of the day

Author: Hariharasudhan
18 November 2024, 11:00 am

படத்தை மட்டுமல்ல, பாடத்தையும் பலமுறை பார்க்க வேண்டும் என நடிகர் சூரி திருச்செந்தூரில் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி: விரைவில் விடுதலை பாகம் 2 படத்தின் மூலம் தன்னை ஒரு கதாநாயகனாக நிரூபிக்க உள்ள நடிகர் சூரி, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர், அங்கு அவருடன் புகைப்படம் எடுக்க விரும்பியவர்கள் உடன் போட்டோ மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

அப்போது, அங்கு வந்த சிறுவன், தான் நீங்கள் நடித்த சில படங்களை பல முறை பார்த்து உள்ளேன், அதில் நீங்கள் நன்றாக நடித்து உள்ளீர்கள் எனக் கூறி உள்ளார். அதற்கு நடிகர் சூரி, படத்தை மட்டும் பலமுறை பார்த்தால் போதாது, பாடத்தையும் பலமுறை கற்க வேண்டும், தந்தை, தாய் கூறுவதைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

SOORI SWAMI DHARSAN IN TIRUCHENDUR TEMPLE

முன்னதாக, முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்து பெற்றது. அந்த வகையில், நடிகர்கள், இயக்குனர்கள் என திரைப் பிரபலங்கள் பலரும் திருச்செந்தூர் முருகன் கோயில் பிராகாரத்தைச் சுற்றி வருவதை அடிக்கடி காண முடிகிறது.

இதையும் படிங்க: இருங்க பாய்… அமரன் பட சாதனையை தவிடு பொடியாக்கிய கங்குவா!!

மேலும், நடிகர் சூரி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் முதல் பாகத்தில் நடித்து இருந்தார். இதில் சூரியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது சிறந்த நடிப்பில் வெளியான கருடன் படத்தில் கவனம் பெற்றார். இந்த நிலையில் தான் சூரி நடிப்பில் விடுதலை பாகம் 2 படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 146

    0

    0