விஜய்யை பங்கமாக கலாய்ப்பது கூட தெரியாமல் கமண்ட் செய்த விஜய் நண்பர் ஸ்ரீமன்: வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..!
Author: Rajesh12 February 2023, 10:00 am
‘புதிய மன்னர்கள்’ என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீமன். இருப்பினும் 1997ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான லவ டுடே படத்தின் மூலம் பிரபலமானவர் இவர். தளபதி விஜய் அவர்களுடன் சினிமா உலகத்திற்கு வரும் முன்னரே நண்பராக இருந்தவர். நடிகர் ஸ்ரீமன், சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் மூவரும் விஜயின் நெருக்கமான நண்பர்கள் ஆவர்.
நடிகர் ஸ்ரீமன் அவர்கள், லவ் டுடே படம் துவங்கி சமீபத்தில் வெளியான “வாரிசு” திரைப்படம் வரை விஜயுடன் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். வம்சி இயக்கி தில் ராஜு தயாரித்த ” வாரிசு” படத்தில் விஜய்யுடன் ஸ்ரீமன் நடித்திருந்தார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவிற்கு ஸ்ரீமன் கருத்து தெரிவித்து மொக்கை வாங்கியுள்ளார். அதாவது நெட்டிசன் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் விஜய்யின் நண்பருமாகிய ஸ்ரீமன் நடித்த படத்தின் ஒரு காட்சியை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ விஜய் அவர்களை கலாய்க்கும் வகையில் பதிவிடப்பட்டது என தெரியாமல் தன்னை அவர் பாராட்டுவதாக நினைத்து “எல்லா நேரத்திலும் கற்றுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார் நடிகர் ஸ்ரீமன். இந்த பதிவு வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் நடிகர் ஸ்ரீமனை கலாய்த்து வருகின்றனர்.
Hahaha learning all the time
— actor sriman (@ActorSriman) February 11, 2023