தண்ணிக்கே கணக்கு பார்த்தவன் வடிவேலு.. – வெளுத்து வாங்கிய நடிகர்..!

Author: Vignesh
28 June 2023, 1:00 pm

தமிழ் சினிமா உலகில் காமெடி ஜாம்பவானாக ஜொலித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் வடிவேலு. இவருக்கென்று தனிக்குழுவை வைத்து பல படங்களில் அவர்களுடன் காமெடி காட்சிகளை அமைத்து வந்தார் வைகைப்புயல் வடிவேலு.

vadivelu-updatenews360

இதனிடையே, வடிவேலு மார்க்கெட் சரிய அவருடன் நடித்த சக காமெடி நடிகர்கள் வடிவேலு செய்த பல செயல்களைப் பற்றி பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி வடிவேலுடன் நடித்த நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் வடிவேலு தனக்கு செய்த பல்வேறு செயல்களை பகிர்ந்து உள்ளார்.

vadivelu-updatenews360

அதில் அவர் வடிவேலு பார்த்தாலும் சரி பார்க்கலன்னாலும் சரி தான் அவரோடு சேர மாட்டேன் என்றும், தன் தாய் தகப்பனை விட தன்னுடைய அண்ணன் விஜயகாந்தை பார்ப்பதாகவும், அவரை தப்பா பேசினவனை பார்க்க மாட்டேன் என்றும், விஜயகாந்த் தன்னிடம் வடிவேலுவை நடிக்க சொல்லு என்று தன்னிடம் சொன்னதும் எதுக்கு அடிக்கவா என்று கிண்டலாக கூறியதாகவும், இதை வடிவேலுவிடமே தான் தெரிவித்ததாக கூறினார்.

vadivelu-updatenews360

மேலும், எம்ஜிஆர் விஜயகாந்த் மயில்சாமி மாதிரி வடிவேலு உதவி செய்வாரா என்ற கேள்விக்கு இந்த பிறவியில் அது நடக்காது என்றும், எம்ஜிஆர் அவரை யாரை வைத்தும், ஒப்பிட்டுப் பேச முடியாது எனவும், வடிவேலு எல்லாம் சரியான கஞ்சன் உலகத்திலேயே கஞ்சன், அவன் தண்ணிக்கே கணக்குப் பார்த்தவன் என்றும், தங்களுடைய குழுவில் யாருக்கும் உதவி செய்யாமல் வடிவேலு இருந்ததாகவும், வடிவேலு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று காட்டமாக சாரப்பாம்பு சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!