லோகேஷ் பச்சை பச்சையா பேசுவாரு… இப்போ மட்டும் கையில மைக் இல்லனா.. உண்மையை உடைத்த பிரபல நடிகர்..!
Author: Vignesh27 January 2023, 7:30 pm
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ள விக்ரம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகியுள்ளது. தமிழகத்தை தாண்டி மற்ற இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தியது.
கோலிவுட்டில் நுழைந்த கொஞ்சம் காலத்திலே லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட இயக்குனர்களில் ஒருவர். மேலும் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து விஜய் நடிக்கும் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
ஏற்கனவே லோகேஷ் – விஜய் காம்போவில் வெளியான மாஸ்டர் படம் மாஸ் ஹிட் ஆனது. இந்த நிலையில் விஜய் 67வது படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல் இந்த திரைப்படமும் டபுள் மடங்கு ரசிகர்களை கவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தளபதி 67 படம் குறித்த அப்டேட் வருகிற பிப்ரவரி 1,2,3 தேதியில் வெளியாகும் என லோகேஷ் அறிவித்திருத்திருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறித்து நடிகர் சுதீப் கிஷான் பேசியது இணையத்தில் படு வைரலாகிறது.
அதாவது நடிகர் சுதீப் கிஷான் லோகேஷின் மாநகரம் படத்தில் நடித்திருந்தவர். சமீபத்தில் நடந்த நேர்காணலில் லோகேஷ் மற்றும் சுதீப் கிஷான் கலந்து கொண்ட போது லோகேஷ் கெட்டவார்த்தை பேசுவாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுதீப் கிஷான் அவர் கெட்ட வார்த்தை மட்டும் தாங்க பேசுவாரு. இப்ப மைக்ல பேசுறனாலதான் நல்ல பேசுறாரு என்று தெரிவித்தார்.