விருதுகளை அள்ளிக் குவிக்கும் நடிகர் சூரி திரைப்படம்; சும்மா அள்ளுங்க

Author: Sudha
2 July 2024, 6:38 pm

சூரி நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல படமாக அமைந்தது. நிறைய விருதுகளையும் வென்றது.

இது சூரிக்கு விருது காலம் போல. கூழாங்கல் இயக்குனர் பி. எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் “கொட்டுக்காளி” 74வது பெர்லின் திரைப்பட விழாவில் கொட்டுக்காளி படத்தை திரைக்குழுவினர் திரையிட்டனர். 2024ம் வருடத்திற்காக டிரன்சில்வேனியா திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த படத்திற்கான விருதை கொட்டுக்காளி வென்றது.

இந்த நிலையில், போர்ச்சுக்கலில் நடைபெற்ற புதிய படங்கள் மற்றும் இயக்குநர்களுக்கான 20வது திரைப்பட விழாவில் கோல்டன் லினக்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த பிக்ஷன் திரைப்படம் எனும் விருதை வென்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!