சூர்யா – ஜோதிகாவுக்கு விரைவில் விவாகரத்து… பிரபலத்தின் பகீர் தகவல்!
Author: Udayachandran RadhaKrishnan30 December 2024, 4:19 pm
தமிழ் சினிமாவில் திருமணம் செய்து சுமூகமான உறவில் உள்ள ஜோடிகள் மிகக்குறைவ. அதில் முக்கியமான ஜோடி சூர்யா ஜோதிகா.
பிரபல ஜோதிடர் சொன்ன பகீர் தகவல்
இருவரும் படங்களில் நடித்த போதே ஏற்பட்ட காதல் கடைசியில் திருமணம் வரை சென்றது. எந்த பிரச்சனையும் இல்லாமல் இருவரும் நல்ல ஜோடியாகவே வலம் வருகிற்னர்.
தற்போது இருவருக்கும் சில பிரச்சனை, சர்ச்சை என பேசப்பட்டு வந்தாலும், சூர்யாவுடன் புகைப்படத்தை எடுத்து ஜோதிகா வெளியிட்டு வந்தார்.
சூர்யாவின் தந்தையான நடிகர் சிவக்குமாரிடம் பிரச்சனை ஏற்பட்டு மும்பை சென்றதாகவும் ஒரு தகவல் பரவி வரும் நிலையில், பிரபல ஜோதிடர் சொன்ன தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: அர்னவை கழட்டி விட்டாரா புதுக்காதலி? பிக் பாஸ் போட்டியாளருடன் காதல்.. வைரலாகும் வீடியோ!!
ஜோதிட சத்குருஜி மெஹ்ரோ என்பவர், ஜோதிகா சினிமாவில் வளர்ந்து வரும் சமயத்தில் சூர்யாவை காதலித்தார். அப்போது ஜோதிகா என்னிடம் வந்து தான் ஒரு நடிகரை திருமணம் செய்ய இருக்கிறேன், செய்யலாமா என கேட்டுள்ளார்.
அதற்கு நான், தாராளமாக செய்யலாம்.. ஆனால் விவாகரத்தில்தான் முடியும் என கூறினேன்,. இதைக் கேட்டு அவர் டென்ஷனாகிவிட்டார். பின்னர் ஒரு படத்தில் சிறப்பு காட்சியில் ஜோதிகா என்னை பார்த்தார், ஆனால் கடைசி வரை பேசவே இல்லை என கூறியுள்ளார்.