அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
Author: Udayachandran RadhaKrishnan25 December 2024, 7:25 pm
நடிகர் சூர்யாவின் 44-வது படமான ரெட்ரோ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
குட் பேட் அக்லியுடன் மோதும் ரெட்ரோ
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தங்களுடைய 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரெட்ரோ படத்தின் டீசர் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
இதையும் படியுங்க: சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
டீசரில் இப்படத்தை 2025-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது அதன் ரிலீஸ் தேதி மே 1-க்கு மாற்றப்பட்டுள்ளது.
அதாவது நடிகர் அஜித்தின் பிறந்தநாள் தினத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அஜித்–சூர்யா தலையமைப்பில் இந்த போட்டி பாக்ஸ் ஆபிஸில் ஒரு செம்ம இடையூறு ஏற்படுத்தும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.