தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து அதன் பிறகு பெரிதாக எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. இதை அடித்து சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் “கங்குவா” திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் .

இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது.அதையடுத்து சுதா கொங்குரா இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட புறநானுறு திரைப்படம் கைவிடப்பட்ட நிலையில் பாலாவின் இயக்கத்தில் உருவாக இருந்த வணங்கான் திரைப்படத்திலிருந்தும் சூர்யா அதிரடியாக விலகிவிட்டார். இதை அடுத்து நடிகர் சூர்யா தற்போது 44-வது திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் .
இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மாலத்தீவு பகுதியில் நடைபெற்றது. இதற்கிடையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தது. பின்னர் மாலத்தீவில் படப்பிடிப்பை முடித்த பட குழு கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் ஊட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள்.
இப்படத்திற்கான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செய்ய அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார் என்றும் வெளிவரும் செய்திகள் கூறுகிறது. மேலும் சூர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஷூட்டிங்கிலிருந்து சில நாட்கள் நிச்சயம் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.