அந்த மூன்றெழுத்து நடிகரோட நீ நடிக்க கூடாது: ஜோதிகாவுக்கு கண்டிஷன் போட்ட சூர்யா..!

Author: Rajesh
5 March 2023, 7:00 pm

ஹிந்தி திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய ஜோதிகா, வாலி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, விஜய், அஜித், கமல்ஹாசன், ரஜினி என டாப் ஹீரோக்களுடன் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார்.

surya jyothika - updatenews360

சந்திரமுகி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனிடையே, நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலம் முதல் சில திரைப்படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் கொண்ட நடிகர் சூர்யாவுடன் காதலில் விழுந்தார். இருவீட்டாரின் சம்மதம் பெற்று திருமணம் செய்த இந்த நட்சத்திர தம்பதிக்கு தேவ் மற்றும் தியா என்ற குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்துக்குப் பிறகு, படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் பல வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2015ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே போன்ற படங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான ரோல் மட்டும் ஏற்று நடித்தார் ஜோதிகா. அதுமட்டுமில்லாமல் ஜோதிகா, சூர்யா இணைந்து 2D Entertainment தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து, வெற்றி ஜோடிகளாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யா, ஜோதிகாவை காதலிக்க ஆரம்பத்திலிருந்தே ஜோதிகா யாருடன் நடிக்க வேண்டும், நடிக்க கூடாது என்பதனை சூர்யா சொல்லும் அட்வைஸ்களை கேட்டு தான் படங்களில் நடிக்க கமிட்டாவார். அந்த வகையில், பிரபல மூன்றெழுத்து நடிகருடன் நடிக்க கமிட்டான ஜோதிகாவை, அந்த நடிகருடன் நடிக்க விடாமல் சூர்யா தடுத்துள்ளார். 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சூர்யா,ஜோதிகாவுக்கு திருமணமானது.

அந்த சமயத்தில் ஜோதிகா கிட்டத்தட்ட 5 திரைப்படங்களில் நடிக்க கமிட்டானாராம். ஆனால் அத்தனை திரைப்படத்தையும் ஜோதிகா வேண்டாமென உதறி தள்ளிவிட்டார். அதில் யாரடி நீ மோகினி திரைப்படமும் ஒன்று. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இத்திரைப்படம், தனுஷ் மற்றும் நயன்தாராவின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இதனிடையே, நயன்தாராவுக்கு முன்னர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது ஜோதிகா தான்.

dhanush - updatenews360

ஆனால் திருமணம் செய்துகொள்ள போகும் சந்தோஷத்தில் இந்த படத்தை வேண்டாம் என தவிர்த்துள்ளார் ஜோதிகா. மேலும், தனுஷுடன் இணைந்து நடித்த நடிகைகள் பலர் மார்க்கெட்டில்லாமலும், சர்ச்சைகளில் சிக்கி வந்ததாலும், சூர்யா அப்படத்தில் அவருடன் நடிக்கவிடவில்லை எனவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!