“தங்கலான் மாபெரும் வெற்றியடையும்”… சூர்யாவின் பதிவால் எகிறும் எதிர்பார்ப்பு!

Author:
14 August 2024, 3:37 pm

வித்தியாசமான கதை களத்தில் திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி கொடுப்பவர் தான் இயக்குனர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் அதிரடியான நாடகத் திரைப்படமாக உருவாகி வரும் படம் தான் “தங்கலான்” இந்த திரைப்படத்தில். விக்ரம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மாளவிகா மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

thangalaan

இவர்களுடன் பார்வதி மேனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் விக்ரமின் 61வதுதிரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரூ. 150 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம். வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகியுள்ளது .

vikram thangalaan

இந்த நிலையில் விக்ரமின் தங்கலான் படத்தை பாராட்டி சூர்யா தனது twitter பக்கத்தில் தங்கலான் படத்தின் வெற்றி மிகப் பெரிய வெற்றியாக அமையும் என பதிவிட்டு இருக்கிறார். சூர்யாவின் இந்த பதிவால் விக்ரம் ரசிகர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து விட்டதாக கூறி படத்தை பார்க்க ஆர்வத்துடன் இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Kumbh Mela Monalisa Was she sexually harassed by the arrested director கதறி அழுத கும்பமேளா மோனாலிசா : கைதான இயக்குநரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டாரா?