சூர்யாவிற்கு ஆப்பு வைத்த கார்த்தி…பறிபோன பட வாய்ப்பு..!

Author: Selvan
12 November 2024, 3:24 pm

தற்போது சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் தன்னுடைய தம்பி கார்த்தியால் ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த சூர்யாவின் தகவல் வெளியாகியுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நண்பன். இப்படத்தில் நடிகர் விஜய்,ஜீவா,ஸ்ரீகாந்த் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

nanban movie news

படத்தில் நடிக்க நடிகர் விஜய் முதலில் ஒப்புக்கொண்டு பின்பு வேறொரு படத்திற்கான லுக் டெஸ்டுக்காக நடந்த ஹேர் கட்டினால் திடீரென நண்பன் திரைப்படத்திலிருந்து விலக வேண்டிய நிலை உருவானது.

இதனால் படக்குழு விஜய்க்கு பதிலாக வேற ஒருவரை தேடிக்கொண்டு இருக்கும்போது நடிகர் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார்.

இதையும் படியுங்க: வைரலாகும் பிக் பாஸ் வின்னர் அர்ச்சனா வீடியோ…ரசிகர்கள் கொண்டாட்டம்..!

ஆனால் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் தன்னுடைய தம்பி கார்த்தியை வைக்குமாறு படக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.இதற்கு படக்குழு மறுப்பு தெரிவிக்கவே சூர்யா படத்தில் இருந்து விலகினார்.

பின்பு நடிகர் விஜயை நண்பன் திரைப்படத்தில் நடிக்க வைத்து படமும் மாஸ் ஹிட் ஆனது.

இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது.நடிகர் சூர்யாவிற்கு வாய்ப்பு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என நெட்டிசன்கள் கமெண்ட் பண்ணி வருகின்றனர்.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 202

    1

    0