அப்பா பிரபல நடிகராக இருந்தாலும் சொந்த உழைப்பில் சூர்யா சேர்த்த சொத்து – எத்தனை கோடி தெரியுமா?

Author: Rajesh
4 February 2024, 9:10 pm

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இவர்கள் ஒருவரும் காக்க காக்க திரைப்படத்தில் நடித்த பொது காதலித்து வந்தார்கள். அந்த படத்தில் வரும் ரொமான்ஸ் காட்சிகளில் உண்மையாகவே ரொமான்ஸ் செய்து வேற லெவல் கெமிஸ்ட்ரி கொடுத்தனர்.திருமணம், குழந்தைகள் என ஆனதும் ஜோதிகா நடிப்பில் இருந்து விலகி பின்னர் மீண்டும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடித்து கலக்கி வருகிறார். கடைசியாக அவர் நடித்த காதல் தி கோர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாக கலெக்ஷ்ன்ஸ் அள்ளியது.

surya

சூர்யாவும் தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வியக்க வைத்துள்ளது. 2024ல் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 250 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு ரூ. 20 முதல் ரூ. 25 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 380

    0

    0