மனைவி பேச்சே மந்திரம்… முழுசா மும்பை வாசியாகவே மாறி வரும் சூர்யா!
Author: Shree20 September 2023, 11:33 am
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. அஜித், விஜய், ரஜினி என டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து கெரியரின் உச்சத்தில் இருக்கும்போது நடிகர் சூர்யா மீது காதல் வயப்பட்ட ஜோதிகா, அவரையே கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர் இல்லற வாழ்வில் கவனம் செலுத்தினார்.
பின்னர் குழந்தைகள் பிறந்து, அவர்கள் வளர்ந்ததும் மீண்டும் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார் ஜோதிகா. தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட பங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தன் கணவருடன் சேர்ந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
அந்நிறுவனம் பல்வேறு தரமான படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ஜோதிகா என்று சூர்யாவே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். குறிப்பாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் உருவானதற்கு முக்கிய காரணமே ஜோதிகா தானாம். கதை கேட்டு சூர்யா குழப்பத்தில் இருந்த சமயத்தில் இது ஒர்க் அவுட் அகும் என அவருக்கு ஊக்கம் கொடுத்து நடிக்க வைத்தது ஜோதிகா தான். இவ்வாறு பல படங்கள் உள்ளன.
நடிகர் சூர்யாவுக்கு 47 வயது ஆனாலும் அவர் இன்றளவும் தனது உடலை செம்ம ஃபிட்டாக வைத்திருக்கிறார். அதேபோல் ஜோதிகாவுக்கும் தற்போது 45 வயது ஆனாலும் இன்றளவும் அவர் இளம் ஹீரோயின் போல் ஜொலித்து வருகிறார். அவர்கள் தற்போது மும்பையில் செட்டில் ஆகி பாலிவுட் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மகாபாரத கதையில் சூர்யா நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் அப்படம் பான் இந்தியா படமாக உருவாகிறதாம். ஒருவேளை படம் ஹிட் ஆகிவிட்டால் சூர்யா முழுசாக பாலிவுட்காரர் ஆகவே மாறிவிடுவார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் ஜோதிகா தானாம். அவரை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறார்.