12 வருஷத்துக்கு முன்னே இத்தனை கோடியா? 7ம் அறிவு வசூல் கேட்டு வாய்பிளக்கும் ரசிகர்கள்!

Author: Shree
25 October 2023, 4:56 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் 7ம் அறிவு. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு அறிவியல் புனைவுத் தமிழ்த் திரைப்படமாகும்.

இப்படத்தின் வித்தியாசமான கதையும், சூர்யாவின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதி தர்மர் அரசியல் நெருக்கடிகளால் சீனாவுக்கு நடந்தே சென்று சேர்கிறார். அங்கே அவர் மருத்துவம் பார்க்கிறார். சீனர்களுக்குக் களரியைக் கற்றுக் கொடுக்கிறார். புத்தமதத்தின் புதிய பிரிவைத் தோற்றுவிக்கிறார்.

இதையடுத்து போதிதர்மரின் பரம்பரையில் வந்த சாகசக் கலைஞரான அரவிந்தைத் (சூர்யா) தேடிக் கண்டு பிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அவரது டி.என்.ஏ.வை தூண்டித் விடுகிறார்கள். அந்த சமயத்தில் அவருக்குப் போதி தர்மரின் திறமைகளான போர்த்திறம், வீரம், தற்காப்பு பயிற்சி போன்றவை நினைவிற்கு வருகின்றன. பின்னர் சீன உளவுத்துறை இந்தியாவில் பரப்பும் நோய்க்கிருமிகளை சூர்யா ஸ்ருதி ஹாசன் டீமுடன் சேர்ந்து முறியடிக்கிறார்.

இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து அப்போவே சுமார் ரூ. 100 கோடி ஈட்டி சாதனை செய்ததாம். இது மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இன்று பலகோடியில் படம் எடுத்தே 100 கோடி தாண்டாத நிலையில் 2011ம் ஆண்டில் வெளிவந்த 7ம் அறிவு திரைப்படம் இத்தனை கோடி வசூல் செய்ததா என எல்லோரும் வாய்ப்பிளந்துவிட்டனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ