ஐதராபாத்தில் 68வது பட சூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய், விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை திரும்பினார். விஜயகாந்த் உடலுக்கு நேற்றைய தினமே அஞ்சலி செலுத்திய அவர், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க இருக்கிறார்.
இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற அவர், நெல்லையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மேற்கொண்டனர். அரசியல் வருகையை நோக்கி ஒவ்வொரு நடவடிக்கையும் எடுத்து வரும் நடிகர் விஜய், இந்த முறை தூத்துக்குடி, நெல்லையை குறி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
சில மாதங்களுக்கு முன் மாணவர்களுக்கு ஊக்குத்தொகை வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகர் விஜய் தற்போது, அரசியல் என்ட்ரிக்காக ஒவ்வொரு முயற்சியும் தொடர்ந்து செய்து வரும் நிலையில், தற்போது நெல்லைக்கு சென்று அங்கு வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்க உள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 1000 நபர்களுக்கு இந்த நலத்திட்ட உதவியை விஜய் செய்யவிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், விஜய் கலந்து கொண்டதால் அவரைக் காண கடலென ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். அப்போது, விஜய் நிகழ்ச்சி அரங்கில் தட்டு தடுமாறி உள்ளே வந்தார். அந்த சமயத்தில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் விஜய் வருவதை அறியாமல் கதவை மூடிவிட்டார். இதனால், விஜய் தடுக்கி கீழே விழ உடனே கடுப்பான புஸ்ஸி ஆனந்த் கதவை மூடிய அந்த நபரை முதுகில் ஓங்கி அடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரனாகி வருகிறது.
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
This website uses cookies.