நடிகர் தருணா இது…? திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Author:
13 August 2024, 11:56 am

ஆந்திராவை சேர்ந்தவரான பிரபல தெலுங்கு நடிகரான தருண் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். 20ஸ் ஆரம்பத்தில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருந்த இவர் தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ள தருண் 1991 ஆம் ஆண்டில் சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி திரைப்படத்திற்காக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 2000 காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் தருண்.

தமிழில் புன்னகை தேசம் திரைப்படத்தில் நடித்து எல்லோரது கவனத்தையும் வைத்தார். அதை எடுத்து எனக்கு 20 உனக்கு 18 திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட தருண் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை அப்போதே உருவாக்கிக் கொண்டார்.

இருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஆல் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். இப்போது சினிமாவை விட்டு விலகி பிசினஸில் அதிக கவனத்தை செலுத்தி வரும் தருணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் நடிகர் தருணா இது?ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறாரேப்பா என இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 145

    0

    0