கையில் காயத்துடன் வாக்களித்த விஜய்.. ஓட்டு போட வந்த தளபதியால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!(video)

Author: Vignesh
19 April 2024, 2:25 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

மேலும் படிக்க: தாய்லாந்தில் பார்ட்டி.. முகம் சுளிக்க வைக்கும் வீடியோவை வெளியிட்ட VJ பார்வதி..!

இதனிடையே, படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் படு வேகமாக நடந்து வரும் நிலையில், தற்போது ஒரு ஸ்பெஷலான தகவல் ஒன்று லீக் ஆனது. இந்நிலையில், டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. GOAT படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Vijay - Updatenews360

இந்நிலையில், அடுத்து, விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் தளபதி 69 தான், தன்னுடைய கடைசி படம் என அறிவித்து உள்ளார். இப்படத்திற்கு பின் விஜய் சினிமாவில் இருந்து விலக முழு நேர அரசியலில் பணியாற்ற உள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் வேலைகளில் மும்மரமாக இருக்கும் விஜய் கோட்படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தார். தற்போது, இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடி மையத்திற்கு எப்போது வருவார் என்று தமிழக முழுவதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

Vijay - Updatenews360

மேலும் படிக்க: என்ன விடாம அஜித்தை அனுப்புறீங்க.. கடுப்பான 82 வயது சீனியர் சிட்டிசன்..!

இந்நிலையில், விஜய் விமான நிலையத்திலிருந்து நீலாங்கரையில் இருக்கும் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு வெள்ளை சட்டை அணிந்து காரில் சென்று தன்னுடைய ஓட்டினை போட்டு இருக்கிறார். அதுவும், கையில் காயம் ஏற்பட்டு மருத்துவ டேப் போட்டு ஓட்டினை செலுத்தி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் தளபதிக்கு என்ன ஆச்சு என்று ஷாக்கிங் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள். மேலும், படப்பிடிப்பு காட்சியின் போது சிறு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் இணையதளத்தின் வெளியாகி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 274

    0

    0