தயவு செஞ்சு யாரும் அதைப்பத்தி கேக்காதீங்க.. – உதயநிதி ஸ்டாலின் பதிலால் அப்செட்டில் ஃபேன்ஸ்..!

Author: Vignesh
13 March 2023, 4:45 pm

தமிழ் சினிமாவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் விளங்கி கொண்டிருப்பவர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் மா மன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுவே அவருடைய கடைசி படம் என்று சொல்லி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

udhayanidhi stalin - updatenews360

இதற்கு முழு காரணம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் முழுவதுமாக அரசியலில் தன்னை அர்ப்பணிக்க இருப்பதாகவும், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 4 வருடங்களாக உருவான கண்ணை நம்பாதே திரைப்படம் தற்போது திரைக்கு வர தயராகியுள்ளது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், இப்படத்தை அருள்நிதி தான் எனக்கு Refer செய்ததாக கூறினார்.

கண்ணை நம்பாதே படம் கிட்டத்தட்ட 4 வருடங்களாக கஷ்டப்பட்டு எடுத்திருப்பதாகவும், மேலும் தான் நான்கு ஆண்டுகளாக உழைத்ததால் தான் இப்போது அமைச்சராக பொருட்பேற்று உள்ளதாகவும், அதுமட்டுமின்றி, ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் நிறுவனத்தில் இருந்து தான் விலகிவிட்டதாகவும், எனவே சினிமா துறை சம்பந்தமாக யாரும் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று வெளிப்படையாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Laika Productions exits Jason Sanjay film விஜய் அரசியலால் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பில் சிக்கல்..லைக்கா எடுக்கப்போகும் அதிரடி முடிவு.!