கோவை சரளாவின் வாழ்க்கையே அழித்த வடிவேலு… கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ணல!

நடிகை கோவை சரளா தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். இதுவரை 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதையும்’ பெற்றுள்ளார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொலைக்காட்சியில் தனது திறமையை நிருபித்துயுள்ளார். அவரது ‘என்ன இங்க சத்தம்’, ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’, ‘சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ போன்ற வசனங்கள் இன்று பிரபலம். திரையுலகில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த அவருக்கு, ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க செய்து அறிமுகம் செய்து வைத்தார் பாக்கியராஜ்.

கோவை சரளா இன்று வரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும் இறக்க குணமும் நிறைந்தவர். தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார். பல ஏழைக்குழந்தைகளை படிக்க வைத்து வருகிறாராம் கோவை சரளா. முதியோர் இல்லங்களுக்கும் அடிக்கடி சென்று உதவிகளும் செய்து வருகிறாராம்.

மனோரமாவிற்கு அடுத்தபடியாக ஒரு தலைச்சிறந்த நகைச்சுவையாளினியாகத் திகழும் கோவை சரளா தென்னிந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையாகாது. 25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்து வரும் அவரது இடத்தை இனி எந்தவொரு நகைச்சுவை நடிகையும் ஈடு செய்ய முடியாது என்பதையே நிதர்சனமான உண்மை.

இந்நிலையில், இவர் நடிகர் வடிவேலுடன் இணைந்து மாத்தி மாத்தி கலாய்க்கும் காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. வடிவேலு மற்றும் கோவை சரளா இவர்களுக்கிடையில் ஏற்படும் அடிதடி மற்றும் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பக்க பலமாக இருந்தது.

இதில் இயக்குனர்கள் படத்தில் கோவை சரளா வடிவேலுவை அடிக்கும் காட்சிகளை அதிகப்படுத்தி வந்தனர். அந்த நகைச்சுவையால் கோவை சரளாவிற்கு திரைத்துறையிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது. இதை பொருத்துக்கொள்ள முடியாமல் எங்கு கோவை சரளா தன்னை விட அதிகம் ஸ்கோர் எடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில், நடிகர் வடிவேலு தான் நடிக்கும் படத்தில் கோவை சரளா நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டு உள்ளார். மேலும், தான் படத்தில் நடிக்க மாட்டேன் என்று அடாவடி செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், வடிவேலுவை இழக்க கூடாது என நினைத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர். இதன் காரணமாக கோவை சரளா பல படவாய்ப்புகளை இழந்துள்ளார். கோவை சரளாவின் திரை வாழ்க்கை அவ்வளவுதான் என்று கூட பேச்சுக்கள் வந்தன. ஆனாலும் அவர் தொடர்ந்து முயற்சித்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். ஆனாலும், தமிழ் படங்களில் பேசப்பட்ட அளவிற்கு அவர் பேசப்படவில்லை. இதனால் கெரியரை இழந்தார். இதனிடையே தனது குடும்பத்தையும் உடன் பிறந்தவர்களையும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற சூழ்நிலையால் தான் திருமணமே செய்யாமல் இருந்துவிட்டார் கோவை சரளா. எனவே கோவை சரளாவின் திரை வாழ்க்கையை காலி செய்ததே நடிகர் வடிவேலு தானாம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

தமிழ் மட்டுமே உயிர் மூச்சு… காமராஜரின் தொண்டன் : கடைசி வரை கட்சி மாறாத குமரி அனந்தன்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…

53 minutes ago

நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம்.. வெடிகுண்டை வீசிய மர்மநபர்கள் யார்?

நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…

1 hour ago

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

14 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

14 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

15 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

17 hours ago

This website uses cookies.