பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகின்றதா?.. ஜீவா ஓபன் டாக்..!

Author: Vignesh
27 April 2023, 6:30 pm

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது

அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.

vijay tv serial - updatenews360

ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி.

சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்நிலையில், விஜய் டிவியில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெற்றிகரமான ஒளிபரப்பாகின்றன. இதனிடையே, இளைஞர்களை கவரும் தொடர்கள், வீட்டுப் பெண்கள் பார்ப்பது போல் கதையுள்ள தொடர்கள் என ஒளிபரப்பாகி வருகின்றன.

pandiyan store-updatenews360

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மாலை ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.

இதைக்கேட்ட ரசிகர்கள் நல்லாதானே ஓடிட்டு இருக்கு ஏன் முடிவுக்கு கொண்டு வருகிறீர்கள் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

pandiyan store-updatenews360

இதனிடையே, கடந்த சில நாட்களாகவே சீரியல் முடிவுக்கு வருகிறது என கூறப்படுகிறது. அதேபோல் இந்த தொடரில் ஜீவா வேடத்தில் நடிக்கும் வெங்கட் என்பவரும் கிழக்கு வாசல் என்ற தொடரில் நாயகனாக நடிக்க கமிட்டாகிவிட்டார்.

pandiyan store-updatenews360

ஒரு பேட்டியில் பேசும்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் வரும் ஜுன் மாதம் முடிவுக்கு வந்துவிடும் எனவும், இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவதற்கும் புதிய சீரியல் தொடங்குவதற்கும் சரியாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.‘

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 899

    6

    0