கடவுள் மாதிரி வந்து உதவிய நெப்போலியன் – கண்கலங்கிய வித்தார்த்!

Author: Rajesh
21 December 2023, 6:08 pm

நெப்போலியன் 1991ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர். ஆறடிக்கும் மேல் உயரம், கம்பீரமான ராஜநடை, முறுக்கு மீசை என பக்கா கிராமத்து மெட்டீரியலாக திரையுலகில் அறிமுகமான நெப்போலியன், போலீஸ் கேரக்டர்களுக்கும் அம்சமாக பொருந்திப் போனார்.

நெப்போலியன் ஹீரோ, வில்லன் கெஸ்ட் ரோல் என வலம் வந்த ரஜினியுடன் எஜமான் படத்தில் நடித்திருந்தார். நெப்போலியனுக்கு கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்கள் தரமான கம்பேக் கொடுத்தன. அதேபோல், நெப்போலியன் கமலுடன் விருமாண்டி, தசாவதாரம் படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

nepolian

இறுதியாக கார்த்தியுடன் நடித்த சுல்தான் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனிடையே சினிமா, அரசியல் என பயணித்துக் கொண்டிருந்த நெப்போலியன், ‘ஜீவன் டெக்னாலஜிஸ்’ என்ற பெயரில் ஐடி நிறுவனமும் நடத்தி வருகிறார். நெப்போலியனின் ஐடி நிறுவனம் சென்னை, அமெரிக்கா என இரு இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. நெப்போலியன் தனது மகன் தனுஷின் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சென்று செட்டில் ஆனார்.

பல வருடங்களாகவே அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியனின் வீட்டிற்கு யூடியூப் பிரபலம் இர்பான் அவரின் வீட்டிற்கு சென்று வீடியோ வெளியிட்டதில் அனைவருக்கும் தெரியவந்தது. அமெரிக்க விவசாயியாக மகிழ்ச்சியான ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியன் சமீபத்தில் தனது பிறந்தநாளை மீனா, குஷ்பு , யூடியூபர் இர்பான் மற்றும் அமெரிக்க வாழ் நண்பர்களுடன் கொண்டாடினார்.

இந்நிலையில் நெப்போலியன் குறித்து பிரபல நடிகர் வித்தார்த், “அமெரிக்காவில் மன்னரைப் போலவே வாழ்ந்து வரும் நடிகர் நெப்போலியன் நான் பணமில்லாமல் கஷ்டப்பட்டபோது என் மகனின் ஸ்கூல் பீஸ் முழுமையாக கட்டினார்” அவர் செய்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியோடு கூறினார்”.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 474

    0

    0