விஜய் 10-ம் வகுப்பில் வாங்கிய மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?.. வைரலாகும் மார்க் லிஸ்ட்..!
Author: Vignesh13 May 2024, 7:13 pm
தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.
மேலும் படிக்க: அந்த விஷயத்தில் LOCK செய்த விக்கி.. நயன்தாராவே நினைச்சாலும் டைவர்ஸ் பண்ண முடியாது..!
சமீபத்தில் வெளிவந்த விசில் போடு பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜூன் மாதம் கோட் படத்தின் இரண்டாவது சிங்கில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தில், சிஎஸ்கே அணியில் இருந்து மூன்று வீரர்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளனர் என சமீபத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால், இது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் படிக்க: மாஸ் லுக்கில் சிம்பு.. Thug life ப்ரோமோ Video வெளியிட்டு உறுதி செய்த படக்குழு..!
மேலும், கிளைமாக்ஸ் கட்சியில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்கிறார் என இணையதளத்தில் தகவல் ஒன்று உலா வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அப்படி நடந்தால் முதல்முறையாக விஜய்யுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் இதுவே ஆகும். இதற்கு முன்னர் விஜயின் திரைப்படத்தின் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கோடி ரூபாய் கொடுத்தாலும் NO.. இந்த விஷயத்தில் கறார் காட்டும் சாய் பல்லவி..!
இந்த நிலையில், பத்தாம் வகுப்பில் விஜய் வாங்கிய மார்க் பற்றி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தான் நடிகர் விஜய் 10 வகுப்பு படித்து இருக்கிறார். 1100 க்கு அவர் 711 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழில் 155/200, கணக்கில் 95/200, ஆங்கிலத்தில் 133/200, அறிவியல் 206/300, சமூக அறிவியல் 122/200 மதிப்பெண்களை அவர் பெற்று இருக்கிறார்.
மேலும் படிக்க: “ரங்கு ரக்கர” பாடலுக்கு என்னவொரு குத்து.. படு கவர்ச்சியான உடையில் ஷிவானி நாராயணன்..!(Video)