தளபதி 67 படத்தின் ‘LEO’ டைட்டில் காப்பியா..? இப்படி மாட்டிக்கிட்டியே லோகேஷ்… கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..!!
Author: Babu Lakshmanan3 February 2023, 5:55 pm
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ‘லியோ’ என பெயர் காப்பியடிக்கப்பட்டதா..? என்று விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும், ‘வாரிசு’ படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளதாகக் கூறி, அதன் சக்ஸஸ் பார்ட்டியையும் படக்குழுவினர் கொண்டாடி விட்டனர். இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் நடிக்கும் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
வாரிசு படத்தின் வெளியீட்டின் போது இனிமேல் தளபதி 67 படத்தின் அப்டேட்களை அடுத்தடுத்து பார்க்கலாம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜனவரி 2ம் தேதி படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், இந்தப் படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள சினிமா நடிகர் மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகின.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் பெற்றுள்ளது.
இந்நிலையில், படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்ட ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தாண்டு அக்டோபர் 19-ம் தேதி படம் வெளியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. LEO – Bloody Sweet Promo எனக் குறிப்பிடப்பட்டு வெளியாகியுள்ள இந்த ப்ரோமிவில் ஆங்கில வரிகளுடன் கூடிய பாடல் பின்னணியில் ஒலிக்க விஜய் சாக்லேட் க்ரீமை தயார் செய்து கொண்டிருக்கிறார்.
அந்தக் காட்சிகளுக்கு இணையாக தீப்பிழம்புடன் கத்தி ஒன்றும் தயார் செய்யப்படுகிறது. அந்தக் கத்தியை சாக்லேட் க்ரீமுக்குள் முக்கி எடுக்கும் விஜய் ‘ப்ளடி ஸ்வீட்’ என சொல்வதுடன் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், விஜயின் LEO திரைப்படத்தின் டைட்டில் ஆங்கில புத்தகத்தின் பெயரை காப்பி அடித்துள்ளதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் வைரலாகி வருகிறது. Dawn H. Hawkes எழுதிய Blood of Leo எனும் ஆங்கிலப் புத்தகத்தின் டைட்டிலை ஒத்து இருப்பதாக கமெண்ட்டுக்கள் அடித்து வருகின்றனர்.
இந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தை வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், 2011ம் ஆண்டே இந்த டைட்டில் வைக்கப்பட்டு விட்டதாக கருத்துக்களை பகிரிந்து வருகின்றனர்.