இணையத்தில் லீக் ஆன “தளபதி 67” மிரட்டும் வில்லனின் கெட்டப்..! கெத்தான சம்பவம் பண்ண போகும் லோகேஷ்..!
Author: Vignesh28 January 2023, 3:30 pm
விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படம் பெரிய அளவில் வசூலில் வேட்டையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு லோகேஷ் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதே போல் லோகேஷின் விக்ரம் படமும் எதிர்பார்த்த அளவைவிட பெரிய வெற்றியை கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தில் த்ரிஷா,சஞ்சய் தத்,கௌதம் மேனன்,மன்சூர் அலிகான்,அர்ஜூன் மற்றும் மிஷ்கின் போன்ற மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தில் விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி வந்தது.
மேலும் இதைப்பற்றி லோகேஷிடம் கேட்டபோது இதற்கு தற்பொழுது இவர் ஒரு புரியாத புதிராக பதில் அளித்துள்ளார். சியான் விக்ரம் இந்த படத்தில் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டோம் என்று சொன்னதற்கு அதற்கு லோகேஷ் ஆமாம் நானும் கேள்விப்பட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
இது உண்மையா என்று கேட்டதற்கு கொஞ்ச நாள்ல தெரிஞ்சிரும் இப்பவே சொல்லிட்டா சர்ப்ரைஸ் இருக்காது என்று பதில் அளித்திருக்கிறார். இவரின் இந்த மாதிரியான பதில் லோகேஷ் 67 படத்தில் விக்ரம் நடிக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது
ஏற்கனவே விக்ரம் படத்தில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யாவை கொண்டு வந்தது பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. அதேபோலவே இப்பொழுது தளபதி 67 படத்திலும் சியான் விக்ரம் கதாபாத்திரமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தளபதி 67 படத்திற்கு லோகேஷ் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். அதாவது இந்த படத்திற்கான அப்டேட் பிப்ரவரி 1,2,3 இல் ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் இந்த படம் ஒரு அதிரடியான படமாகவும் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.
சீயான் விக்ரம் தான் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருந்த நிலையில், கதாபாத்திரத்தின் நீளம் குறைவாக இருக்கிறது என்று விக்ரம் கூறி மறுத்துவிட்டாராம். அதன்பின் தான் சூர்யாவை லோகேஷ் கனகராஜ் அணுகியுள்ளார்.
தற்போது தளபதி 67 ஷூட்டிங் பாட்டில் விஜய், விக்ரமை இறுக்கி கட்டி பிடித்து இருக்கும் புகைப்படமும் தற்போது ரசிகர்களை மேலும் குதூகலப்படுத்தியது.
இந்நிலையில்,
இந்த நிலையில் தளபதி 67 படத்தை குறித்து முக்கியமான அப்டேட் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது. அதாவது கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 ல் 6 வில்லன்கள் நடிக்க இருப்பதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.
அதில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் தளபதி 67 ல் ஆக்சன் கிங் அர்ஜுனுடைய கெட்டப் போட்டோ கசிந்துள்ளது.
அந்த புகைப்படத்தில் இருப்பது அர்ஜுனா என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருகின்றனர். மேலும் விஜய் எந்த மாதிரி கெட்டப்ல வர போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த திரைஉலகத்திற்க்கே இருந்து வருகிறது.