விஜய் – சங்கீதா விவாகரத்து..? தற்போதைய மனைவி இந்த நடிகையா.. விக்கிபீடியா தகவலால் அப்செட்டில் ஃபேன்ஸ்..!

Author: Vignesh
4 January 2023, 10:22 am

விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு. பீஸ்ட் பட படப்பிடிப்பின் போதே இப்படத்திற்கான அறிவிப்பு வந்துவிட்டது, படம் முழுவதும் தயாராகி வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.

அண்மையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. விஜய்யின் எந்த பட நிகழ்ச்சி என்றாலும் அவரது மனைவி சங்கீதா கலந்துகொள்வார். பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சி என்றாலும் கலந்துகொள்வார். ஆனால் அட்லீ-ப்ரியாவின் சீமந்தம், வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கு சங்கீதா அவர்கள் வரவில்லை.

இதனால் பல செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. அவர் வராததற்கு முக்கிய காரணம் அவர்களின் மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுடன் சங்கீதா அங்கு இருப்பதால் நிகழ்ச்சிகளுக்கு வர முடியவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு, பிரிந்து வாழ்வதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் உண்மையில் விஜய் மனைவி சங்கீதா லண்டன் சென்றுள்ளதாகவும், இந்த வருட வெக்கேஷனை தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் கொண்டாட இருப்பதாகவும், இதற்காக தான் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யும், சென்னையில் உள்ள பணிகளை முடித்து கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க, லண்டன் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Vijay - Updatenews360

ஏற்கனவே இப்படி ஒரு தவறான தகவல் பரவப்பட்டு வரும் நிலையில், அனைவரையுமே அதிர்ச்சி அடைய செய்யும் விதமாக, விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில், விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், இருவரும் மியூச்சுவல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக போடப்பட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் யாரோ சிலர் கீர்த்தி சுரேஷ் தான் விஜய்யின் பார்ட்னர் என்றும், விஜய்க்கு மூன்று குழந்தைகள் இருப்பது போன்றும்… அத்துமீறி விக்கிபீடியா பேஜில் மாற்றம் செய்துள்ளது ரசிகர்களிடையே, கோவத்தை ஏற்படுத்தி உள்ளது.

Keerthysuresh_updatenews360

விக்கிபீடியாவில் இடம்பெறும் தகவல்கள் அனைவராலும் மாற்றக்கூடியவை எனவே இதனைப் பயன்படுத்தி வேண்டும் என்றே சிலர், இவ்வாறான பொய்யான தகவலை மாற்றி பதிவிட்டுள்ளனர். கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு கூட, சில அரசியல் தலைவர்களின் பெயர்களை தவறாக விக்கிபீடியாவில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Vijay - Updatenews360

நெகட்டிவ் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் ஆனால் அதை கண்டுக்காமல் நாம் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என விஜய் சொன்ன வசனத்தை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 5860

    310

    87