மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்களின் மூலம் தென்னிந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் திரைப்படம் தளபதி67. இப்படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது குறித்து டீசர் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது.
இப்படம் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ, கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், வஸந்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார்.
தளபதி67 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்திலேயே தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் மூணாறில் நடத்தி முடித்தனர். இந்நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் படக்குழுவினர் 180 பேருடன் காஷ்மீர் பறந்தது. அங்கு 2 மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. கடுமையான குளிருக்கிடையிலும் விறுவிறுப்பான சூட்டிங்கை திட்டமிட்டு லோகேஷ் இயக்கி வருகிறார். தினந்தோறும் காலை 10 மணி முதல் 5 மணி வரை சூட்டிங் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
படத்தின் சூட்டிங் துவங்கியவுடனே காஷ்மீரிலிருந்து சென்னை திரும்பினார் த்ரிஷா. இதனால் பல்வேறு யூகங்களுக்கு இடம் ஏற்பட்டது. தொடர்ந்து காஷ்மீரின் குளிர் தாங்காமல் அவர் சென்னை திரும்பியதாக கூறப்பட்டது.
த்ரிஷாவை போல நடிகர் விஜய்யும் கடந்த சில தினங்களாக, காஷ்மீரிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டு சென்னை வந்ததாகவும், தற்போது மீண்டும் காஷ்மீர் சூட்டிங்கில் அவர்கள் பங்கேற்பதற்காக சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால்தான், லியோ படக்குழுனருடன் நிகழ்ந்த கௌதம் மேனனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவரும் இடம்பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த நெட்டிசன்கள் இதனை விமர்சனம் செய்து வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.