சகல வசதிகள் இருந்தும் சைலண்டா இருக்காரேப்பா…. விஜய் ஆண்டனியின் மொத்த சொத்து இத்தனை கோடியா?
Author: Shree24 July 2023, 1:01 pm
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரமெடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நான் திரைபடத்தில் நடித்து ஹீரோவானார். குறிப்பாக சினிமாவில் தொழிலை மாற்றுவார்கள் அதன் பின்னர் பெரிதாக அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், விஜய் ஆண்டனி விஷயத்தில் அப்படி இல்லை. அவருக்கு நடிப்பு தொழில் நல்லாவே கைகொடுத்தது.
இவர் தமிழில் நான், சலீம், இந்தியா பாக்கிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, கோடியில் ஒருவன். திமிரு புடிச்சவன், பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் 2. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதுவரை ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. சினிமாவில் எந்த ஒரு போட்டியும், பொறாமைகளும் இன்றி இருப்பவர் விஜய் ஆண்டனி,
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் முழு சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் ஆண்டனி நடிகர், இசையமைப்பாளர் என மாறி மாறி சம்பாதித்து வருகிறார். அதுமட்டும் அல்லாது அவரது மனைவி பாத்திமா தயாரிப்பு நிறுவும் வைத்து நடத்தி வருகிறார். எனவே இவர்களுக்கு சினிமா துறையில் மட்டும் பல வழிகளில் வருமானம் கிடைக்கிறதாம். அதன் படி விஐய் ஆண்டனியின் மொத்த சொத்து ரூ. 50 கோடி இருக்குமாம். அது தவிர பெங்களூரில் பெரிய பங்களா, சென்னையில் வீடு என வைத்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு சொகுசு கார்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதற்காக அவர் மிகவும் விலை உயர்ந்த BMW மேலும் மூன்று உயர்தர சொகுசு கார்களை வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது..