‘அவளுடன் நானும் இறந்து விட்டேன்’… தனது மகளுக்காக நடிகர் விஜய் ஆண்டனி எடுத்த முடிவு!!

Author: Babu Lakshmanan
21 September 2023, 8:23 pm

மகள் இறந்த நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தூங்க சென்ற நிலையில், அவருடைய தந்தை அறையில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் அஞ்சலிக்கு பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக மன அழுத்தம் இருந்து வந்ததாகவும், அதற்காக அவர் சிசிச்சை பெற்று வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

மகளின் பிரிவை தாங்க முடியாமல் வாடி வரும் நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மகள் இறந்த நிலையில் விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பு நெஞ்சங்களே, என் மகள் மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த சாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத அமைதியான இடத்திற்கு தான் என் மகள் சென்று இருக்கிறாள்.

என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள் ; அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்களை அவளே தொடங்கி வைப்பாள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த உருக்கமானப் பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 920

    27

    2