காரின் இன்சூரன்ஸ் காலாவதியானதா..? ஓட்டுப்போட வந்த நடிகர் விஜய்க்கு வந்த சோதனை… வெளியான புதிய தகவல்..!!
Author: Babu Lakshmanan21 February 2022, 2:17 pm
நடிகர் விஜய்க்கும் தமிழக அரசியலுக்கு எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். அவர் செய்யும் ஏதாவது செயல்களை வைத்து அரசியலுடன் தொடர்புப்படுத்தி சர்ச்சையை கிளப்புவது வாடிக்கையான ஒன்றாகும். அதேபோலத்தான், நடிகர் விஜய்யும் தமிழக அரசியல் நிலவரங்களை தனது செயல்களின் மூலம் மறைமுகமாக விமர்சித்தும், கிண்டலடித்தும், அரசியல் கட்சிகளை வம்புக்கு இழுப்பார். இதனால், ரெய்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அவர் சந்திக்க வேண்டியிருந்தது.
அப்படித்தான் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வந்து வாக்களித்து விட்டுச் சென்றார். சைக்கிளில் வந்து வாக்களித்து விட்டுச் சென்றது பெரிய விஷயமா..? என்று கேட்டால், அது இல்லைதான். ஆனால், அவர் வந்த சைக்கிளின் கலர்தான் இங்கு பேசு பொருளாகியது. திமுகவின் கலரான சிவப்பு மற்றும் கருப்பு கலரில் ஆன சைக்கிளை நடிகர் விஜய் பயன்படுத்தி திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், அதுவே திமுகவுக்கு ஓட்டாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் வாக்களித்த நிகழ்வும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் கருப்பு நிற மாஸ்க் அணிந்து விட்டு, சிவப்பு நிற காரில் வந்ததால், மீண்டும் அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதை திமுகவினர் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கினார்.
ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கமும் போட்டியிட்ட நிலையில், அவர் ஏன் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட போகிறார்..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, நடிகர் விஜய்யின் நிலைப்பாடு திமுக ஆதரவு இல்லை என்பது உறுதியாவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, ஓட்டுப்போடுவதற்காக நடிகர் விஜய் பயன்படுத்திய காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டதாக புகார் எழுந்தது. இது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த இரு தினங்களாக இதைப்பற்றிய விவாதம்தான் சமூக வலைதளங்களில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில்,உள்ளாட்சித் தேர்தலின்போது நடிகர் விஜய் வாக்களிக்க வந்த காரின் இன்சூரன்ஸ் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த காருக்கு இன்சூரன்ஸ் உள்ளதாக விஜய் தரப்பில் ஆதாரம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
எப்போது எல்லாம் தமிழகத்திற்கு தேர்தல் வருகிறதோ.. அப்போதெல்லாம் நடிகர் விஜய்க்கு பிரச்சனை ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. பார்ப்போம், அடுத்த தேர்தலில் எப்படி என்று..?