தளபதி நடிச்சாலே லாபம் தான்… ரூ. 100 கோடி ஷேர் – கேக் வெட்டி கொண்டாடிய விஜய்!

Author:
14 October 2024, 10:20 am

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் இந்த திரைப்படம் தான் கோட். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி சாதனை படைத்த இந்த படம் கடந்த செப்டம்பர் 5- ம் தேதி வெளியானது.

GOAT MOVIE

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் விஜய்யுடன் சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த் , மோகன், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து நடித்திருந்தார்கள் . இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார்.

இதில் மகன் விஜய் வயதை குறித்து காட்டுவதற்காக டிஎஜிங் தொழில்நுட்பம் எல்லாம் பயன்படுத்தப்பட்டிருந்தது படத்திற்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது. மேலும் படத்தில் நடிகை திரிஷா ஒரு குத்துப் பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது .

GOAT

இப்படியாக இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்திருந்தது. இதன் மூலம் படத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 100 கோடி ஷேர் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியானது.

இதையும் படியுங்கள்: பொண்ணுங்க கண்ணு பூரா உங்க மேல தான்… விவாகரத்துக்கு பின் ஜெயம் ரவி வெளியிட்ட புகைப்படங்கள்!

இது படத்தின் மிகப்பெரிய லாபமாக கருதப்படுகிறது. இதை அடுத்து விஜய் மற்றும் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி இணைந்து கேக் வெட்டி இந்த வெற்றியை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

  • Bismi Criticized Nayanthara கண்ணை மறைத்த பண வெறி.. நயன்தாராவை விளாசிய பிரபலம்!!
  • Views: - 261

    0

    0