தகரடப்பா மூஞ்சி…. கதறி அழுது கூனி குறுகி நடித்த விஜய் – அவமானங்கள் நிறைந்த அசுர வளர்ச்சி!
Author: Shree21 June 2023, 9:10 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஸ்டார் அந்தஸ்தை பிடித்திருக்கும் விஜய் என்ன தான் அப்பாவின் உதவியால் சினிமாவில் நடிகரானாலும் அடித்தளத்தில் இருந்து வந்த, சினிமா பேக்ரவுண்ட் இல்லாமல் வந்த பல நூற்றுக்கணக்கான நடிகர்களை போலவே ஆரம்பத்தில் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
விஜய் 1992ம் ஆண்டு நாளையத்தீர்ப்பு படத்தில் ஹீரோவாக நடித்தபோது அவரை குறித்து என்ற பிரபலமான பத்திரிகை ஒன்று ” லாரி டயருக்கடியில் மாட்டிய தகரட்டப்பா மூஞ்சி” இவனெல்லாம் நடிச்சா யாரு படம் பார்ப்பாங்க? என செய்தித்தாளில் கொட்டை எழுதிட்டு விமர்சித்தார்களாம். அதை கேட்டு விஜய் அடுத்தநாள் அழுது கூனி குறுகி நடித்தாராம்.
அதன் பின்னர் விஜய்யின் அப்பா, இதையெல்லாம் நீ சந்தித்து தான் ஆகவேண்டும். இன்னும் இதுபோன்று பலநூறு விமர்சங்கள் வரும் ஆனால் அதையெல்லாம் கண்டு ஓடி ஒளியக்கூடாது என அவருக்கு அறிவுரை கூறினாலும். சம்மந்தப்பட்ட அந்த பத்திரிக்கை நிறுவனத்தை முற்றுகையிட்டு கடுமையாக எச்சரித்தாராம். அதன் பின்னர் மகனை எப்படியாது மிகப்பெரிய ஹீரோவாக்கவேண்டும் என அவர் முழுவீச்சில் இறங்கினாராம் இதனை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.