காதல் மனைவிக்காக சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் விஜய்.. சும்மா சொல்லக்கூடாது வேற ரகம் தான்!!
Author: Udayachandran RadhaKrishnan24 January 2023, 7:02 pm
தன்னுடைய காதல் மனைவிக்காக நடிகர் விஜய் கொடத்த சர்ப்ரைஸ் கிப்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய், சங்கீதா என்பவரை கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
சமீபகாலமாக விஜய்க்கும், சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை என்றும், இவருக்கும் விவாகரத்து செய்துகொண்டார்கள் என்றும் வதந்திகள் வெளிவருகிறது. ஆனால், இது எதுவும் உண்மையான தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சங்கீதா தன்னுடைய கணவர் விஜய் தனக்கு கொடுத்த பரிசு குறித்து பேசியுள்ளார்.
Sangeetha mam about @actorvijay 🥰wow cute pair 😍😍#Varisu pic.twitter.com/LVwcsEj1i5
— 𝘚𝘸𝘦𝘵𝘩𝘢🥰 (@Swetha_little_) January 23, 2023
திருமணத்திற்கு முன் சங்கீதாவிற்கு நடிகர் விஜய் டைமென்ட் மோதிரம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளாராம். இதனை மகிழ்ச்சியுடன் அந்த நிகழ்ச்சியில் சங்கீதா பகிர்ந்துகொண்டார்.