விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம்.. வெளியான ஆச்சர்யமூட்டும் டயட் சீக்ரெட்ஸ்..!

Author: Vignesh
6 February 2024, 5:11 pm

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், விஜய் எப்போதுமே ஃபிட்டாக ஒல்லியாகவே காணப்படும் ஒரு பிரபலம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். சரியான நேரத்தில் தூங்குவது சரியான நேரத்தில் சாப்பிடுவது தேவையான நேரத்தில் ஓய்வெடுப்பது தான் அவரது பிட்னஸ் சீக்ரெட்டாம். அவர் படப்பிடிப்பில், இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரவு 7 மணி ஆனால், இரவு சாப்பாட்டை முடித்து சிறிது நேரம் நடிப்பாராம்.

அதேபோல, தினமும் சரியாக ஒன்பது முப்பது மணிக்கு எல்லாம் தூங்கும் பழக்கத்தை வைத்திருக்கும் விஜய், இந்த பழக்கத்தின் காரணமாக நைட் ஷூட்டிங்கிற்கும், இரவு நேர பார்ட்டி மற்றும் கெட் டுகெதர் நிகழ்ச்சிகளை தவிர்த்து விடுவாராம். மேலும், அசைவம் மிகவும் பிடிக்கும் உணவு என்றாலும், இப்போது எல்லாம் அதை தவிர்த்து வருகிறாராம். தோசை மிகவும் பிடிக்கும் உணவு ஆனால், இரண்டு தோசைக்கு மேல் சாப்பிட மாட்டாராம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ