நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
Author: Udayachandran RadhaKrishnan26 December 2024, 2:40 pm
உடன் நடித்த நடிகரின் மரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த விஜய் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிதியுதவி செய்துள்ளார்.
விஜய், சிம்ரன் நடிப்பில் துள்ளாத மனமும் துள்ளும் படம் கடந்த 1999ல் வெளியானது. படம் மாஸ் ஹிட் பெற்று விஜய்க்கு மைல்கல்லாக அமைந்தது.
இதையும் படியுங்க : லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் டவுசர் பாண்டி. அவரது உண்மையான பாரி வெங்கட். டவுசர் பாண்டியாக நடித்ததால் அவருக்கு அந்த பெயரே அடையாளமாக மாறியது.
இந்த நிலையில் பாரி வெங்கட் குறித்து காமெடி நடிகர் காக்கா கோபால், சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் பாரி அண்ணனை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்ட போது அவர் தான் எனக்கு உதவினார். திருநெல்வேலி பட ஷூட்டிங் முடிச்சிட்டு நான் சென்னைக்கு வரேன். அப்பே பாரி அண்ணனை காணோம்னு ஒரு வாரமா தேடறாங்க.
கேட்குதா @DirectorBose?
— விஜய் ரசிகை #TVK (@Itsme__visali) December 26, 2024
1999ஆம் ஆண்டு:
ட்ரவுசர் பாண்டி இறந்தபோது @actorvijay சார் அவர் வீட்டுக்கு போய் அவர் மனைவியை சந்தித்து 1 இலட்சம் பணம் கொடுத்தார் ?❤️
– காக்கா கோபால்#ThallathaManamumThullum#ThalapathyVijay? #TheGreatestOfAllTime #Thalapathy69 pic.twitter.com/gufu2GbWE1
ஆனால் பெரம்பலூர் பக்கத்துல நடந்த விபத்துல அவர் இறந்துட்டாருங்கிற செய்தி கிடைச்சது.
இதுக்கப்பறம் எல்லாரும் அவரு வீட்டுக்கு போனோம். விஜய்யும் அவரது தந்தையும் உடனே வீட்டுக்கு வந்து, பா அண்ணனோட மனைவிகிட்ட ₹1 லட்ச ரூபாய் கொடுத்து அஞ்சலி செலுத்திட்டு போனதை இன்னும் மறக்க முடியல என கூறினார்.