12 வயது சிறுமியை இசையமைப்பாளராக தனது படத்தில் அறிமுகம் செய்த நடிகர் விஜய் : வேற லெவல் கூட்டணி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 December 2022, 4:15 pm

12 வயதில் இசையமைப்பாளரை பார்த்துள்ளீர்களா, அதுலயும் ஒரு பெண் இசையமைப்பாளர் முதன்முறையாக தமிழ் படத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

அதுவும் தளபதி விஜய் படத்தில்.. விஜய் அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்தில் 12 வயதே ஆன ஸ்ரீலேகா என்ற சிறுமிதான் இசையமைப்பாளரானார்.

அவர் வேறு யாரும் இல்லை.. பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணிக்கும் மற்றும் இயக்குநர் ராஜமௌலிக்கும் சொந்தக்காரர்.

12 வயது சிறுமியின் திறமையை அப்போதே கணித்திருந்த விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், அவரை நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகப்பபடுத்தினார்.

அந்த படத்தில மணிமேகலை என்ற பெயருடன் அறிமுகமான அவர், பின்னர் ஸ்ரீ லேகா என்ற பெயருடன் வலம் வருகிறார். தற்போது வரை அவர் தெலுங்கு சினிமா உலகத்தில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

நாளைய தீர்ப்பு படம் வசூல் ரீதியா வெற்றியடைந்தது மட்டுமல்லாமல், சிறந்த புதுமுக நடிகர் என்ற விருதை விஜய்க்கு சினிமா எக்ஸ்பிரஸ் வழங்கியது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி