வாரிசு Audio Launch-ல் அஜித்தை மட்டுமல்ல ரஜினியையும் காப்பி அடித்தாரா விஜய்..! வீடியோவை வெளியிட்டு ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
26 December 2022, 12:00 pm

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் – அஜித். திரைத்துறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் நிஜத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட இவர்கள் இருவரது நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளன.

vaarishu- updatenews360.jpg 2

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின்னர் பிரபல நடிகர்கள் இருவரின் படங்களும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த இரு படங்களின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் உட்பட வாரிசு படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

ajith - vijay - updatenews360

2 ஆண்டுகளுக்கு முன்னர் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றபோது, நடிகர் விஜய் கோர்ட் சூட் அணிந்து வந்திருந்தார். அப்போது மேடையேறி பேசும்போது, நண்பர் அஜித் மாதிரி வர்லாம்னு இப்படி கோர்ட் சூட் அணிந்து வந்ததாக தெரிவித்தார். இதன்மூலம் அஜித்தின் டிரெஸ்சிங் ஸ்டைலுக்கு தானும் ஒரு ரசிகன் என அவர் மறைமுகமாக காட்டியுள்ளதாக பேசப்பட்டது.

அதேபோல் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியிலும், அஜித்தின் டிரெஸ்சிங் ஸ்டைலை இமிடேட் செய்து, தான் ஒரு அஜித் ரசிகர் என்பதை மீண்டும் மறைமுகமாக நிரூபித்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். விழாவுக்கு வெள்ளை கலர் பேண்ட், பச்சை கலர் சட்டை அணிந்து சிம்பிளாக விஜய் வந்திருந்தார். இதே போல உடையில் தான் நடிகர் அஜித் துணிவு படத்தில் இடம்பெறும் காசேதான் கடவுளடா பாடலில் நடனமாடி உள்ளார். விஜய் அஜித்தை போன்று அதே நிற உடை அணிந்து இசை வெளியீட்டு விழாவுக்கு வந்ததைப் பார்த்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

Vijay - Updatenews360

இதனிடையே, வாரிசு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி காப்பி என சில நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். எனக்கு போட்டியாளர் நான் தான் என விஜய் குட்டி ஸ்டோரி சொல்லியிருந்த நிலையில், இதே கருத்தை பல வருடங்களுக்கு முன்பு ரஜினி ஒரு மேடையில் சொல்லியிருந்த வீடியோவை வெளியிட்டு, இதை வைத்து நெட்டிசன்கள் பலர் விஜய் ரஜினியை காப்பி அடித்துவிட்டார் என கூறி வருகின்றனர். எனக்கு வேறு யாரும் போட்டி இல்லை ,எனக்கு நானே தான் போட்டி என ரஜினி சொல்லிய அதே கருத்தை தற்போது விஜய்யும் கூறியுள்ளதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ