தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக சிறந்து விளங்கி வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் உடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் .
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இப்படத்தின் மூன்று பாடல்கள் படத்தின் டிரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிகரிக்க செய்தது.
இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகர் விஜய் கோட் படத்தின் குழுவினரோடு கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து தான் நடித்துள்ள கோட் திரைப்படத்தில் ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் விஜயகாந்த்தை காட்சிப்படுத்த சம்மதித்ததற்காக பிரேமலதா விஜயகாந்த்திற்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது. இந்த சந்திப்பின்போது நடிகர் விஜய் உடன் கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் இருந்தனர்.