‘என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?’ ராக்கம்மா கையத்தட்டு vs ரஞ்சிதமே.. வீடியோவை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்..!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2022, 11:45 am

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர், பீஸ்ட் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, அதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.

VijayRanjithame_updatenews360

இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி குரலில் ‘ரஞ்சிதமே’, சிம்பு குரலில் ‘தீ தளபதி’ என 2 பாடல்கள் வெளியாகி சூப்பர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த மாதம் 5ம் தேதி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரஞ்சிதமே ரஞ்சிதமே வெளியாகி, யூடியூப்பில் பல மில்லியன் வீவ்ஸ்களை கடந்து புதிய சாதனை படைத்தது.

vijayrashmika_updatenews360

இந்நிலையில், நடிகர் சதீஷ் இந்தப் பாடலின் இன்னொரு வெர்ஷனை வெளியிட்டு ட்ரெண்டாக்கியுள்ளார். அதில், “அடப்பாவிகளா அநியாயமா சிங்க் பண்றீங்களே” என பதிவிட்டுள்ள அவர், ரஞ்சிதமே பாடலுக்கு ரஜினி டான்ஸ் ஆடும் வீடியோவை ஷேர் செய்துள்ளார். சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், விஜய்க்கே டஃப் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார். மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் இளையராஜா இசையில் ஹிட்டடித்த பாடல் ராக்கம்மா கைய தட்டு.

இதில் ரஜினியின் டான்ஸ் இப்போதும் அவரது ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக உள்ளது. இந்நிலையில், ராக்கம்மா கைய தட்டு பாடலில் ரஜினி ஆடிய டான்ஸை, அப்படியே ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு மேட்ச் செய்து வீடியோ ரெடி செய்துள்ளனர் ரசிகர்கள். பத்து பொருத்தமும் பக்காவா பொருந்துதே ரஞ்சிதமே பாடலின் பல்லவி, கோரஸ், டன்ஸ் பீட் என எல்லா இடத்திலும் ரஜினியின் ராக்கம்மா கைய தட்டு நடனம் பக்காவாக பொருந்தியுள்ளது இந்த வீடியோவை விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 721

    0

    0