வாரிசு படத்தில் நடிக்க மறுத்த பிரபல தெலுங்கு நடிகர்கள்..! தில் ராஜு கூறிய பதிலால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!
Author: Udayachandran RadhaKrishnan17 December 2022, 2:45 pm
நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர், பீஸ்ட் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, அதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி குரலில் ‘ரஞ்சிதமே’, சிம்பு குரலில் ‘தீ தளபதி’ என 2 பாடல்கள் வெளியாகி சூப்பர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த மாதம் 5ம் தேதி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரஞ்சிதமே ரஞ்சிதமே வெளியாகி, யூடியூப்பில் பல மில்லியன் வீவ்ஸ்களை கடந்து புதிய சாதனை படைத்தது.
வாரிசு படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படமும் ரிலீசாக உள்ளது. இதனால் இருவருக்கும் சமமான அளவில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு, வாரிசு பட விநியோகஸ்தர் உதயநிதியை சந்தித்து விஜய் படத்திற்கு நிறைய திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என கேட்டேன் என்றும், விஜய் தான் நம்பர் 1 அவருக்கு தான் முதல் உரிமை தர வேண்டும் என தில் ராஜு கூறியதாக ஒரு செய்தி வெளியானது.இதனால் அஜித் ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, வாரிசு படக்கதையை முதன்முதலில் தெலுங்கு நடிகர்களிடம் கூறி அவர்கள் நடிக்க மறுப்பு தெரிவித்ததனால், விஜய்யிடம் கதை கூறியதாக தில் ராஜு கூறியது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி வாரிசு படத்தின் கதையை, முதலில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிடம் தான் கூறினாராம். அவரால் நடிக்க முடியாமல் போனதால், அதன் பின்னர், ராம்சரண், அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் வெவ்வேறு படங்களில் பிசியாக இருந்ததன் காரணமாக இதில் நடிக்க முடியாமல் போனதால் இறுதியாக விஜய்யை இப்படத்தில் நடிக்க வைத்ததாக அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.