தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.
ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.
தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.
தற்போது பாலிவுட்டில் பிரபல நட்சத்திர நடிகையான கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாக marry christmas என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வரும் விஜய் சேதுபதி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரை வாழ்க்கை அனுபவத்தை குறித்து பேசினார்.
அப்போது, நான் வளர்ந்து வரும் திறமையுள்ள பல இயக்குனர்களுக்கு உதவி செய்யும் விதமாக கெஸ்ட் ரோல்களில் நடித்து கொடுப்பேன். ஆனால், எதற்கெடுத்தாலும் அவரை கூப்பிடுங்க என்று நிறைய பேர் வருகிறார்கள். அந்த மாதிரி படங்களால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தோல்வி அடைந்துவிடுகிறது. இதனால் நான் ஒரு முடிவு எடுத்துள்ளேன். இனிமேல் கெஸ்ட் ரோல்களில் நடிக்க கூடாது என முடிவெடுத்துவிட்டேன். அதே நேரத்தில் வில்லனாக நடிக்கவும் அதிகம் வாய்ப்புகள் வருகிறது. அதையும் நிறுத்திவிட்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ஏகே 63 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு வந்துள்ளதாம். கோடி ரூபாய் கொடுத்தாலும், வில்லன் மற்றும் கேமியோ ரோல்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருக்கிறார் விஜய் சேதுபதி. அஜித்தின் ஏகே 63 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது சந்தேகம்தான் என்று கூறப்பட்டு வருகிறது. அப்படி இந்த வாய்ப்பை அவர் ஏற்றுக் கொண்டால் மார்க் ஆண்டனி படத்தில் கலக்கி SJ சூர்யா போல் விஜய் சேதுபதிக்கும் நல்ல கதாபாத்திரம் அமையும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது, மகாராஜா விடுதலை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகனும் ஸ்ரீஜா என்ற மகளும் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.
தற்போது, சூர்யா சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அடுத்து, அவரது மகள் நடிக்க வருவாரா என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இந்த நிலையில், விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட என்ற புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில், அவரது மகள் ஸ்ரீஜா அடையாளம் தெரியாத அளவிற்கு ஆளே மாறிட்டார் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்…
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
This website uses cookies.