வாவ்… லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ஸ்டைலா போஸ் கொடுத்த விஜய் -வைரல் போட்டோ!
Author: Shree3 November 2023, 6:58 pm
தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகரான விஜய் நடிப்பில் உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. திரைஇப்படம் படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.
சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்தனர்.
சுமார் ரூ. 300 கோடியில் உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 550 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் நடிகை மாயா கிருஷ்ணன் உடன் மிகவும் ஸ்டைலாக எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதில் விஜய்யின் அட்டகாசமான லுக் அனைவரையும் கவர்ந்துள்ளது.