தளபதி 67 LCU கான்செப்ட் தான்… உறுதிபடுத்திய விக்ரம் பட நடிகை..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Author: Vignesh
3 February 2023, 4:30 pm

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்த லோகேஷ், தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் என பட்டையை கிளப்பி வருகிறார்.

விஜய், கமல் என முன்னணி நடிகர்களை வைத்து தன்னிடம் சரக்கு இருக்கிறது என்பதை நிரூபித்த லோகேஷ் கனகராஜ், அடுத்து கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் என ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

lokesh kanagaraj - updatenews360

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ள லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்குகிறார்.

இதற்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. பூஜையுடன் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியுள்ள லோகேஷ் கனகராஜ் கடந்த மூன்று நாட்களாக தளபதி 67 படத்தின் அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.


lokesh kanagaraj - updatenews360

தளபதி 67 படத்தில் நடிக்கும் நட்சத்திர பட்டாளத்தை பார்த்தே பெருமூச்சு விட்டனர் ரசிகர்கள். இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று டைட்டில் வெளியிடப்படுட்ம என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் டைட்டில் இணையத்தில் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜ் நேற்று டைட்டில் அப்டேட்டுக்காக வெளியிட்ட போஸ்டரை கழுகுடன் ஒப்பிட்டு படத்திற்கு ஈகிள் என்பதுதான் தலைப்பு என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

agent tina - updatenews360

இதனிடையே, விக்ரம் படத்தில் டினா கேரக்டரில் நடித்த டான்ஸ் மாஸ்டர் வசந்தி குரு தளபதி 67ல் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். கைதி படத்தில் நடித்த நெப்போலியன் கேரக்டர், விக்ரம் படத்தில் நடித்த டினா கேரக்டர் இந்த இரண்டு பேரும் தளபதி 67ல் இருப்பதால் கண்டிப்பாக இது LCU தான் என்று ரசிகர்கள் வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 658

    0

    0