தெலுங்கு பட ரீமேக்தான் தளபதி 69 கதை… இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலா..!!
Author: Udayachandran RadhaKrishnan19 November 2024, 8:06 pm
தெலுங்கு படத்தை தழுவி தான் தளபதி 69 படம் உள்ளதாக வெளியான தகவல் விஜய் ரசிகர்களை தூக்கி வாரி போட்டுள்ளது.

விஜய் நடிக்கும் கடைசி படம் தளபதி 69. இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க உள்ளார். பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிப்பில் உருவாகி வருகிறது.
இதையும் படியுங்க: சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ… அடுத்தடுத்து தோல்வியால் திடீர் முடிவு!
இந்த படத்தை தெலுங்கு பட நிறுவனமான கேவிஎன் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்த நிலையில் தெலுங்கு படத்தின் தழுவல் தான் தளபதி 69வது படம் என கூறப்படுகிறது.

அதாவது, நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் பகவந்த் கேசரி தானாம். இப்படக்கதையை அறிந்த ரசிகர்கள் வினோத் நல்ல கதையை தேர்வு செய்துள்ளார். கதாபாத்திரங்களும் நல்ல தேர்வு என கூறி வருகின்றனர். இது எந்தளவுக்கு உண்மையென்பது தெரியவில்லை.