அரசியல் பயணம்.. துவக்கமே வெற்றி… குவிந்த வாழ்த்துக்கள் : நடிகர் விஜய் எமோஷனல்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2024, 4:46 pm

அரசியல் பயணம்.. துவக்கமே வெற்றி… குவிந்த வாழ்த்துக்கள் : நடிகர் விஜய் எமோஷனல்!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாது, திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் அனைவரும் நன்றி எனவும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளதாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்து தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 598

    0

    0