“அஜித் – விஜய் இல்ல.. விஜய் – அஜித்” ன்னு எழுதுங்க: பிரபல பத்திரிக்கையாளரை கண்டித்த விஜய்..?வைரலாகும் வீடியோ..!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 10:00 am

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் வரிசையில் இரு துருவ நட்சத்திரங்களாக தற்போது விளங்கி வருபவர்கள் அஜித் – விஜய். இவர்கள் நடிப்பில் திரைப்படங்கள் வெளியானாலே சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி விடுவர். இவர்கள் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

ThunivuAjith_updatenews360

விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படங்கள் இரு படங்களும் பல வருடங்களுக்கு பிறகு, ஒரே நாளில் பொங்கலுக்கு வெளியாகி மோதவுள்ள நிலையில், விஜய், அஜித் ரசிகர்களிடையேயும் படக்குழுவினரிடையேயும் போட்டிகள் நிலவி வருகிறது.

ActorVijay_Updatenews360

கமல், ரஜினி என்று முதலில் கூறி வந்தனர். இப்போது விஜய், அஜித் என்று கூறி வருகிறார்கள் என கூறி பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி சில உண்மைகளை கூறியுள்ளார். முன்பெல்லாம் பத்திரிக்கையில் எழுதும் போது ”அஜித் – விஜய்” என்று எழுதுவோம். இதை பார்த்தவுடன் விஜயிடம் இருந்து எனக்கு நேரடியாக கால் வரும். ”விஜய் – அஜித்” என்று எழுதுங்கள் என்று விஜய் கூறுவார் என தெரிவித்துள்ளார் பிஸ்மி.

ஏற்கனவே, தற்போதைய சூப்பர்ஸ்டார் விஜய் என்றும், முன்னாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறிய பிஸ்மியை ரஜினி ரசிகர்கள் மிரட்டிய வீடியோ வைரலானது. தற்போது விஜய்யை பற்றி இப்படி கூறியது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி