தவெக மாநாட்டில் Yellow Saree.? சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தாரா நடிகை திரிஷா.?!!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2024, 1:00 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய், அரசியல் பிரவேசத்துக்கு மாறியுள்ளார். தளபதி 69 படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போடும் விஜய், முழு வீச்சில் அரசியலில் இறங்குகிறார்.

அதே சமயம் விஜய்யுடன் 20 வருடமாக நடித்து வரும் திரிஷாவை வைத்து பல கிசுகிசுக்கள் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இருவரும் நல்ல நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், இருவரையும் வைத்து நெட்டிசன்கள் அடிக்கடி ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் தனிக்கட்சி தொடங்கியதும், திரிஷாவுக்கு பதவி கொடுக்க போகிறார், மாநாட்டில் திரிஷாவும் வருவார் என அரசல் புரசலாக பேச்சுகள் எழுந்து வருகிறது. இதனிடையே நாளை அக்.,27 தவெக மாநாடு நடக்க உள்ளது.

இந்த சமயத்தில் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பது போல, திரிஷா இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு காலை முதலே படுவைரலாகி வருகிறது.

அதில் தேன்குழல் in விஜய் மாநாட்டு கொடியை பக்கத்தில் வைத்துள்ளார். தேன்குழல் முறுக்கு ரொம்ப பேமஸ். ஆனால் எதற்கு என்று தெரியவில்லை. ஆனால் உற்று பார்த்தால் அது ஸ்பெயின் நாட்டு கொடி என்பது நன்றாக தெரிகிறது.

ஒருவேளை அவர் ஸ்பெயினில் இருப்பதை தான் மறைமுக சொல்கிறாரா? அல்லது தவெக கொடி ஸ்பெயின் நாட்டு தேசிய கொடியும் ஒன்றுதான் என்பதை நாளை மாநாடு நடக்கும் நிலையில் கலாயக்கிறாரா என்பது அவரிடம் தான் கேட்க வேண்டும். கொடி படத்தில் அரசியல்வாதியாக திரிஷா நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?