தோழா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் வம்சி பைடிபல்லி அவர்களின் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் டாப் நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.
இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார். இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. ரிலீஸ் ஆனது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் வாரிசு திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது.
இப்படம் உலகமுழுவதும் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் இப்படம் வரும் 22ம் தேதி ஓடிடியிலும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது லோகேஷ் இயக்கத்தில் தளபதி67 படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வாரிசு படம் தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்று விஜய் தெரிவித்துள்ளார். பணக்கார பின்புலத்தில் படத்தின் கதை இருந்தாலும் படத்தில் இடம்பெற்றுள்ள எமோஷன்கள் மற்றும் குடும்ப சென்டிமெண்ட் தனக்கு மிகவும் பிடித்தமானதாக அமைந்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.